Skip to main content

Posts

Showing posts with the label பயணம்

நித்யவனத்தை நோக்கிய பயணம்....

 நான் நித்யவனத்திற்கு செல்லும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து சுலபமாக சமையல் செய்வதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும்.  தோசை மாவு இருந்தால் போதும் எப்படியும் என் கணவர் சமாளித்து விடுவார் என்று எண்ணினேன். ஆனால் தொட்டுக் கொள்வதற்கு உண்டான பொடியை செய்ய வேண்டும். கொள்ளுப்பொடி , இட்லி பொடி , கருவேப்பிலை பொடி என மூன்று வகை பொடிகளை செய்து விட்டேன் . புதினாவும் , கொத்துமல்லி தழையையும் சேர்த்து ஊறுகாய் செய்தேன். தக்காளி தொக்கு செய்து வைத்தேன். இவற்றையெல்லாம் வைத்து மதியத்திற்கு சாதம் வடித்து சாப்பிட்டு விடுவார். பாசிப்பயிறை ஊற வைத்து முளைகட்டியவுடன் கிளாஸ் கண்டெய்னரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட்டேன். கேரட்களை தோள்சீவி நீளமாக நறுக்கி அதையும் பிரிட்ஜில் வைத்தேன். ஒரு லிட்டர் பாலை காய்ச்சி தயிர் செய்து அதையும் பிரிட்ஜில் வைத்தேன். இது போதும் என்று பெருமூச்சு விட்டபோது ஆடைகள் பற்றிய எண்ணம் வந்தது. மூன்று நாட்களுக்குண்டான ஆடைகளை அயர்ன் செய்து அடுக்கி வைத்தேன். சரி இனி என்னுடைய பயணத்தை துவங்கலாம் என்ற நிம்மதி வந்தது.  வீட்டிற்கு வந்து இவையனைத்தையும் பார்த்தவர் , அட இதெல்லாம் ஏன் செஞ்ச

ஜிலேபி மீனும் ஈசூர் அணைக்கட்டும்......

              பனியில் மூழ்கியிருந்த வீடுகளின் இருளில் எங்கள் வீட்டில் மட்டுமே டியூப்லைட்  அதிகாலை நான்கு மணிக்கே எரிந்து கொண்டிருந்தது என்பதை வெளியில் வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது தான் உணர்ந்தோம்.  குளித்து முடித்து திருநீறை உடலெங்கும் பூசியிருந்த சிடுசிடு சைக்கிள் தாத்தா , பிள்ளையார் கோவிலுக்குள் செம்புக்குடம் நிறைய தண்ணீருடன் சாந்தமான முகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்.  அதிகாலை மனிதர்களை இவ்வளவு அழகானவர்களாக மாற்றி விடுவதன் மாயம் என்னவென்றே தெரியவில்லை.  கருங்குழியின் தெருக்களை கடந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டிலும் வாசல் மின்விளக்கை போட்டபடி தூக்க கலக்கத்துடனே இருந்த பெண்கள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். அதிகாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் அந்திமாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் கொண்டிருக்கும் கதைகள் ஏராளம். இரவு முழுக்க நிலவுக்கும் தனக்குமாக நிகழ்ந்த உரையாடல்களை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ரகசியப் புன்னகையின் மணமே அதிகாலை வாசல் தெளிக்கும் போது மண்ணிலிருந்து எழும் மணம். பகல் முழுக்க சூரியனுடன் சேர்ந்து தன்ன

தக்கோலம்...

திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி பாரதத்தின் கடற்படை விமான நிலையத்தின் சுற்றுசுவரை  பெருமையுடன் பார்த்துக் கொண்டே வந்தேன். கல்லாறு பாலத்தை தாண்டி காஞ்சிபுரம் செல்லும் வழியில் கார் திரும்பியபோது தக்கோலம் 8 கி.மீ என்ற வழிகாட்டி பலகையை பார்த்ததும் சிறு துணுக்குறல் வந்தது. தக்கோலம் இதை நான் எங்கேயோ படித்திருக்கிறேன்.    சோழர்களுக்கும் , ராஷ்ட்ரகூடர்களுக்கும்  போர் நடந்த இடம் இந்த தக்கோலம் தான். சோழர்களின் ஆட்சி சரிய காரணமாக இருந்த தக்கோலப் போர். உடனடியாக காரை தக்கோலத்தை நோக்கி திருப்ப சொல்லிவிட்டு ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். எந்த இடத்தில் போர் நடந்திருக்கும்? ராஜாதித்யா யானை மீதமர்ந்து போர் புரியும் போது ராஷ்ட்ரகூட இளவரசனின் அம்புகள் பட்டு யானை மீதே இறந்ததாக வரலாறு இருக்கிறது. யானைப்படை இங்கே எந்த இடத்தில் நின்றிருந்திருக்கும்? குதிரைப்படையும் , காலாட்படையும் என எத்தனை படைவீரர்கள் இங்கே சண்டையிட்டுருப்பார்கள்? ராஷ்ட்ரகூடர்கள் எங்கே நின்றிருந்திருப்பார்கள் ? அப்போதைய அவர்களுடைய உரையாடல்கள் என்னவாக இருந்திருக்கும். போரின் மனநிலைகள் எ

2024 _ புத்தாண்டு துவக்கம்....

  கருந்துளையை ஆராய்ச்சி செய்வதற்காக உலகில் இரண்டாவதாக ஏவுகணையை  அனுப்பியுள்ளது இஸ்ரோ.‌ ஜனவரி முதல் தேதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக Xpo SAT அனுப்பப்பட்டது.  சந்திராயன் - III , ஆதித்யா - L1 ஆகியவற்றின் launch -ன் போதும் பதிவு செய்ய முயன்றோம். இணைப்பு வெளியான‌ ஐந்து நிமிடத்திற்குள் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.  இந்த முறையும் இணைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்பட்டு பதிவு செய்தோம். நம்முடைய அடையாள அட்டை , மற்றும் நம்மை பற்றிய தனிநபர் விபரங்கள் , வாகனத்தில் சென்றால் அவற்றின் பதிவு எண் , இவை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டியவை. இதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை.  ஹரிகோட்டா , சென்னையிலிருந்து 2 மணி நேரப் பயணம். காலை ஒன்பது மணிக்கு லான்ச், காலை 5.30 - 8.30 வரை உள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும். நாங்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4.00 மணிக்கு கிளம்பி அங்கே செல்லும் போது 6.15 ஆகியிருந்தது. முதன்மை சாலையிலிருந்து சூலூர்பேட்டா செல்லும் சாலைக்கு இறங்கி , ஹரிகோட்டாவை நோக்கி பயணமானோம். சூலூர்பேட்டா

செட்டிநாடு.....

  எந்த நீர்மையின் மீதிருந்த வெறுப்பினால் தலைமுடி கூட கருகும் வெயில் பிரதேசத்தில் வாழ முற்பட்டார்கள் ?   மிகப் பெரிதான வீடுகளின் அமைப்பு  எதையோ நோக்கி அறைகூவல் விடுப்பது போலவும் அவற்றில் உறையும் ஆழ்ந்த அமைதி மனதை நிலை குலையச் செய்வது போலவும் ஒரே சமயத்தில் இரு வேறு உணர்வுகளை தந்தது. அனைத்து வீடுகளும் ஒரே காலக்கட்டத்தை சார்ந்தவை.  ஒரு  சமூகத்தின் மாபெரும் எழுச்சி. அச்சமூகத்தின் முன்னோர்களின் ஆழ்கனவுகள்.   எவ்வளவு பெரிய சரிவை சந்தித்திருந்தால் இவ்வளவு உயரம் எழும்பி வரும் ஆன்ம வல்லமையை அச்சமூகம் பெற்றிருக்ககூடும் ? வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு தெருவில் ஆரம்பித்து இன்னொரு தெருவில் தங்களை நிறைவு செய்திருந்தன.  புழுதி பறக்காத அகண்ட தெருக்கள்.  கழிவுநீர் செல்லும் வழி எதுவென்றே தெரியாத அளவிற்கான கட்டிட நுட்பம்.  ஒவ்வொரு வீட்டின் கீழ்தளத்திலும் குதிரை வண்டிகள் நிற்பதற்கான அறைகள் கதவுகளுடன் இருந்தன. முதற்தளத்தில் தான் வீடுகளே ஆரம்பிக்கின்றன.எந்த ஆழத்திலிருந்து தப்புவதற்காக இவ்வளவு உயரமான வீடுகளை கட்டமைத்தனர் ?   ஒவ்வொரு வீட்டிலும் முன் வாயிலில் இடதுபுறம் கிணறு இருக்கிறது. தெளிவாக திட்டமிட்டு கட்டப்பட்ட

சீயமங்கலம்.....

        எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது இப்போது . தார் ரோடுகள் அனைத்து இடங்களையும் இணைக்கின்றன. பயணம் செய்யும் போதெல்லாம் அரசு நிர்வாகங்களை நினைத்து பெருமையாக உணர்கிறேன். வந்தவாசி அருகே தெள்ளாறை தாண்டி தேசூரை தாண்டி , தூணாண்டர் கோவில். இடையில் கீழ்நமண்டி அகழாய்வு செல்லும் வழி என போர்டு இருந்தது. முதலில் சீயமங்கலம் சென்றுவிட்டு வரும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றோம். கோவில் அருகே வரும் போதே அங்கே இருந்த அம்மா ஒருவர் வண்டியை அங்கேயே நிறுத்தசொல்லி பதட்டமாக வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கோவிலின் முன் இறங்கி நின்றோம். இங்கதான் வந்தீங்களா? அந்தப்பக்க ரோட்டுல திரும்பிரூவீங்கலோன்னு நெனச்சு வண்டிய நிறுத்த சொன்னேன். அந்த ரோட்டுல நல்ல பாம்பு ஒண்ணு  பத்தி விரிச்சு ரொம்ப மெதுவா நகந்து போயிட்டு இருந்துச்சு. ரெண்டு கை  வண்ணத்துல இருந்துச்சு என்று பயமும் பரவசமும் பொங்க கூறினார்.  கோவில் கேட் பூட்டியிருந்தது. எப்போ திறப்பாங்க என்று கேட்டோம். வாட்சமேன் கிட்டதான் சாவி இருக்கும் , இந்த போர்டுல நெம்பர் இல்லீங்களா? என்றார் அந்த அம்மா.இல்லையென்று தலையாட்டிவிட

மேல்சித்தாமூர்.....

நண்பகலில் பெய்த மழையில் பூமி இன்னமும் குளிர்ச்சியாக இருந்தது. காற்றிலும் குளிர் வாசனை அடித்தது. ஆனாலும் வானில் தண்ணென்ற வெளிச்சமும் இருந்தது.  இதமான வெண்மை நிறத்தில் , கோபுரங்களில் இருக்கிறதா இல்லையா என்ற வண்ணத்தில் மெல்லிய பிங்க் நிறமும் , நுண்ணிய தங்க நிறமும் ஆங்காங்கே நேர்த்தியாக பூசப்பட்டிருந்த பெரிய மரக்ககதவுகளுடன் கூடிய மலைநாதர் ஜைன கோவில் . மழை பெய்யலாமா , வேண்டாமா என்ற தயக்கத்துடன் மேகங்கள் சூழ இருந்த மாலையில் மேல்சித்தாமூர் சமண கோவிலின் வெளியே நின்றிருந்தோம்.  கோவில் பூட்டியிருந்தது. சமண மடத்திற்கு செல்வோம் என்று சுற்றி வரும் போது பழையபாணி ஓடுகளுடன் கூடிய இரண்டடுக்கு வீடுகள். நிச்சயம் ஒவ்வொரு வீடுகளுக்கும் நூறாண்டு பழமை இருக்கும். ஒவ்வொரு வீட்டின்  வெளியேயும் இருபக்கங்களில் சிறு கல் தொட்டிகளில் நீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நாய் சட்டென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தது. விலங்குகள் கூட ஊரின் தன்மையை கொண்டிருந்தன. மாலை நேரமும் கல்கட்டிங்களும், பழையபாணி வீடுகளும் பழம்பெருமை வாய்ந்த ஊர்களும் நம்மை தன்வசம் இழக்கச் செய்ப