புத்தகங்கள் அதனதன் இடத்தில் சரியாக உள்ளனவா என பார்த்துவிட்டு , 'The Magic Finger' கதையை படிக்க ஆரம்பித்தேன். மூன்று பக்கங்களை கடந்திருப்பேன். என்னுடைய வலது காலின் அருகில் ஏதோ ஒன்று நகர்வது போல் உணர்ந்தேன். சட்டென்று காலை உதறிவிட்டு எழுந்து கொண்டேன். உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி. இரண்டு உணர் கொம்புகளுக்கு அருகில் தலை அடர் சிவப்பு நிறமும் , பின்கழுத்து முக்கோண வடிவில் கருப்பு நிறத்துடன் இருந்தது. நடுமுதுகில் தொடங்கி பின் பக்கம் வரை முக்கோணமாக தீபத்தின் ஒளிச்சுடர் போல கருப்பு நிறம் பரவியிருந்தது. ஒரு பக்கத்திற்கு மூன்று கால்கள் வீதம் ஆறு கால்க ள் இருந்தன.கால்கள் சிவப்பு நிறத்திலும் , நுனியில் வெண்மை நிறமும் கொண்டிருந்தது. இது வரையில் நான் பார்த்திராதது. லேடி பக் ஆக இருக்கவும் வாய்ப்பில்லை. லேடி பக் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த சிவப்பு பூச்சி சற்று நீளமாக இருந்தது. இது எப்படி நூலகத்திற்குள் வந்தது? மூன்று நாட்களாக பென்ங்கால் புயல் காரணமாக பள்ளி விடுமுறையாக இருந்தது. அதிகப்படியான மழையினால் இந்த ...