புத்தகங்கள் அதனதன் இடத்தில் சரியாக உள்ளனவா என பார்த்துவிட்டு , 'The Magic Finger' கதையை படிக்க ஆரம்பித்தேன். மூன்று பக்கங்களை கடந்திருப்பேன். என்னுடைய வலது காலின் அருகில் ஏதோ ஒன்று நகர்வது போல் உணர்ந்தேன். சட்டென்று காலை உதறிவிட்டு எழுந்து கொண்டேன். உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி. இரண்டு உணர் கொம்புகளுக்கு அருகில் தலை அடர் சிவப்பு நிறமும் , பின்கழுத்து முக்கோண வடிவில் கருப்பு நிறத்துடன் இருந்தது. நடுமுதுகில் தொடங்கி பின் பக்கம் வரை முக்கோணமாக தீபத்தின் ஒளிச்சுடர் போல கருப்பு நிறம் பரவியிருந்தது. ஒரு பக்கத்திற்கு மூன்று கால்கள் வீதம் ஆறு கால்க ள் இருந்தன.கால்கள் சிவப்பு நிறத்திலும் , நுனியில் வெண்மை நிறமும் கொண்டிருந்தது. இது வரையில் நான் பார்த்திராதது. லேடி பக் ஆக இருக்கவும் வாய்ப்பில்லை. லேடி பக் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த சிவப்பு பூச்சி சற்று நீளமாக இருந்தது. இது எப்படி நூலகத்திற்குள் வந்தது? மூன்று நாட்களாக பென்ங்கால் புயல் காரணமாக பள்ளி விடுமுறையாக இருந்தது. அதிகப்படியான மழையினால் இந்த பூச்சி வந்திருக்குமோ ? அப்படியே இருந்தாலும் இது தோ
டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி என்று என் கணவர் கூறியதும் நாம் செல்லலாம் என்றேன் நான். சென்னைக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அலுவலகம் சார்ந்த அமைப்புகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அண்ணா நகரில் இருக்கும் SBOA பள்ளிக்கு செல்வதற்கே எங்களுக்கு நாற்பத்தைந்து நிமிடம் ஆகும். இருந்தாலும் சென்று தான் பார்ப்போம் என சென்றோம். காலை 7 மணிக்கு SBOA பள்ளிக்கு சென்றால் , விளையாட்டு போட்டிகள் SBOA மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது என செக்யூரிட்டி கூறினார். அதுவும் ஒரு ஐந்து நிமிட பயணம் தான். SBOA மெட்ரிக்குலேசன் என் கணவருக்கு மனதளவில் நெருக்கமான வளாகம். அங்கே தான் அவர் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படித்தார். கிரவுண்டில் காரை பார்க் செய்துவிட்டு சுற்றிப் பார்த்தார். மனோ , இந்த கிரவுண்ட் எவ்ளோ பெரிசா இருக்கும் தெரியுமா ? இப்போ எப்படி இவ்ளோ குட்டியா இருக்கு ? வேற ஏதாச்சும் பில்டிங் கட்டிட்டாங்களோ ? என அந்த குட்டி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வந்தார். எனக்கு சிரிப்பாக வந்ததது. ஏங்க , அப்போ நீங்க சின்ன பையனா இருந்திருப்பீங்க அதனால் உங்களுக்கு இதே கிரவுண்ட் ரொம்ப பெரிசா தெரிஞ