ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த டோட்டா-சான் என்ற சிறுமி, பேப்பரில் வரைய ஆரம்பித்து அது நீளமாக செல்லும் போது அதற்கு கீழே வரையாமல் தொடர்ந்து மர மேசையில் வரைந்து முடிக்கிறாள். இதைப் போன்ற பல காரணங்களுக்காக ஆசிரியரிடம் தண்டனை பெற்று பள்ளியை விட்டு நீக்கம் செய்யப்படுகிறாள். இப்படிபட்ட சிறுமிக்கு சாக்பீசை கையில் கொடுத்து "டோமோயி" பள்ளியின் கூட்ட அறையின் தரையில் முழுவதும் எழுதிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் இருந்த பள்ளியின் கதை. சிறுவயதில் வீட்டுக்குள்ளேயே எனக்கென சிறு வீட்டை தலையணைகளை கொண்டு அமைத்துக் கொண்ட மகிழ்ச்சிக்கு இணையாகவே இருந்தது, ரயில்வே பெட்டிகளை வகுப்பறைகளாக கொண்ட "டோமோயி" பள்ளியை பற்றி படிக்கும் போது. தலைமையாசிரியரான கோபயாஷியின், மலையிலிருந்து கொஞ்சம்..... கடலிலிருந்து கொஞ்சம்..... என்ற உணவுப் பழக்கத்தை வீட்டில் இப்போது நானும் பின்பற்றி வருகிறேன். மெல்லு அதை மெல்லு.... நன்றாக அதை மெல்லு.... என்ற பாடலை டோட்டோசான் காயமடைந்த ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் பாடுக...