Skip to main content

Posts

Showing posts from May, 2023

நாரத ராமாயணம்

 ராமாயணம் அனைவருக்கும் போலவே எனக்கும் மிகச்சிறிய வயதிலேயே அறிமுகமாகியது.  என்னுடைய சித்தப்பா , எப்போதும் வீட்டில் யாரிடம் பேசினாலும் ,  வெடிய வெடிய ராமாயணம் கேட்டு வெடிஞ்சு எந்திருச்சு சீதைக்கு ராமன் சித்தப்பனாமா  என்று கூறுவார். எனக்கு இருந்த சித்தப்பா அவர் தான். சீதைக்கும் , ராமனுக்கும் அவர் தான் சித்தப்பா என்றால் சீதையும் , ராமனும்  எனக்கு அக்கா , அண்ணனாகத்தான்  இருக்க முடியும் என்று  நினைத்தேன் நான். அம்மாவிடம் சென்று சீதை யார் என்று கேட்டேன். சீதையின் கதையை சொல்லி அம்மா அழுதாள். கஷ்டம் தாங்க முடியாம பூமிக்குள்ள போயிட்டா மகராசி என்றார் அம்மா. பாட்டி இறந்தபோது மண்ணுக்குள் புதைத்தது நியாபகம் இருந்தது எனக்கு.  சீதை என்னுடைய சொந்த அக்கா என்று நம்பி சீதையை நினைத்து தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன். யாரிடமும் எதையும் தெளிவாக கேட்காமல் நானே அனைத்தையும் கற்பனை செய்து விட்டேன். பாட்டிக்கு வருஷாந்திரம் கும்பிடும் போது யாருக்கும் தெரியாமல் சீதா அக்காவுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டேன். வளர வளர ராமாயணம் என்ற கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்றும் என்னுடைய சித்தப்பா சீதைக்கும், 

பூத்தொடுத்தல்....(அனுபவம்)

 கயிறுகளை வைத்து முடிச்சு போடும் பழக்கம் மனிதர்களுக்கு எப்படி வந்திருக்கும்?  சிறு வயதில் பூ தொடுப்பதை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் பூக்களை இரண்டிரண்டாக எடுத்து தரும் பெரிய பொறுப்பை  கொடுத்து பூ தொடுப்பதை பற்றிய அறிவை தரமறுத்து விட்டனர். பக்கத்து வீட்டு அக்கா பூ தொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். கைவிரல்களை லாகவமாக வளைத்து , திருப்பி , இழுத்து என விரல்களில் நூலை வைத்து ஒரு நடன அசைவை கொண்டு வந்து தியான நிலையில்  பூ தொடுப்பதை பார்க்கும் போது ஆசையாக இருந்தது. நானும் ஒரு நாள் இதைப்போல் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அக்காவின் அருகில் சிறுமி ஒருத்தி பூக்களை இரண்டிரண்டாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  அம்மா எப்போதுமே கூறும் வார்த்தைகளில் ஒன்று " கண்ணு பாத்தா , கையி செய்யணும் " என்று. அந்த வார்த்தைகளை  நினைவில் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி எதையுமே செய்ய முயற்சித்ததில்லை. இன்று முயன்று பார்த்துவிட ஆசை வந்தது.  பூக்களை வீணாக்க மனது வரவில்லை. காகிதங்களை வைத்து கட்டிப் பழக முடிவு செய்தேன். அந்த அக்காவின் அருகிலேயே அமர்ந்து கவனித்தபின் த