Skip to main content

Posts

Showing posts from April, 2024

ஆலயக்கலை வகுப்பின் முதல் நாள் முதல் பகுதி

அதிகாலை நான்கு மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. ரமாமணியும் , லக்ஷ்மி அம்மாவும் ஹீட்டர் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர்.   நான் பச்சை தண்ணீரையே எடுத்து குளித்துவிட்டு வெளியே வந்தேன். குளிரான பிரதேசங்களில் , பச்சை தண்ணீரில் குளித்துவிட்டு வெளியே வருவது குளிரை குறைக்கும் என்பது கடந்த இரண்டு வருடங்களில் நானாக கண்டு கொண்ட உண்மை. மலைப்பகுதியில் சீக்கிரம் வெளிச்சம் வந்துவிடுகிறது. ஒவ்வொருவராக நித்யவனத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. வருபவர்களின் முகத்தில்  மலர்ச்சியும் , கொஞ்சம் பதட்டமும் , கேள்வி பாவனையும் , நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது வரும் சிரிப்பும் , பயணத்தினால் வந்த களைப்பும் என பலவித முகபாவங்கள்.  காலை உணவு முடிந்ததும் புத்தருக்கும் , சரஸ்வதிக்கும் ஆசிரியர் மாலை அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் குரு நித்யா கூடத்திற்கு வந்தோம். ஜெயக்குமார் சார்  பாடல் பாடி  துவக்கினார். மணி அண்ணா மேடையில் தோன்றி , ஆசிரியர் வகுப்பு எடுத்து முடிக்கும் வரை யாரும் எதுவும் கேள்வி கேட்காதீர்கள். உங்களுடைய கேள்விகளை எழுதி வைத்துக் கொண்டு வகுப்

நித்யவனத்தை நோக்கிய பயணம்....

 நான் நித்யவனத்திற்கு செல்லும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து சுலபமாக சமையல் செய்வதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும்.  தோசை மாவு இருந்தால் போதும் எப்படியும் என் கணவர் சமாளித்து விடுவார் என்று எண்ணினேன். ஆனால் தொட்டுக் கொள்வதற்கு உண்டான பொடியை செய்ய வேண்டும். கொள்ளுப்பொடி , இட்லி பொடி , கருவேப்பிலை பொடி என மூன்று வகை பொடிகளை செய்து விட்டேன் . புதினாவும் , கொத்துமல்லி தழையையும் சேர்த்து ஊறுகாய் செய்தேன். தக்காளி தொக்கு செய்து வைத்தேன். இவற்றையெல்லாம் வைத்து மதியத்திற்கு சாதம் வடித்து சாப்பிட்டு விடுவார். பாசிப்பயிறை ஊற வைத்து முளைகட்டியவுடன் கிளாஸ் கண்டெய்னரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட்டேன். கேரட்களை தோள்சீவி நீளமாக நறுக்கி அதையும் பிரிட்ஜில் வைத்தேன். ஒரு லிட்டர் பாலை காய்ச்சி தயிர் செய்து அதையும் பிரிட்ஜில் வைத்தேன். இது போதும் என்று பெருமூச்சு விட்டபோது ஆடைகள் பற்றிய எண்ணம் வந்தது. மூன்று நாட்களுக்குண்டான ஆடைகளை அயர்ன் செய்து அடுக்கி வைத்தேன். சரி இனி என்னுடைய பயணத்தை துவங்கலாம் என்ற நிம்மதி வந்தது.  வீட்டிற்கு வந்து இவையனைத்தையும் பார்த்தவர் , அட இதெல்லாம் ஏன் செஞ்ச