மினிமலிஸ்ட் என்ற வார்த்தை எப்போதுமே மனதை நெருட செய்து கொண்டே இருக்கிறது. வெறும் மூன்று ஆடைகள் மட்டுமே போதும் அது கிழிந்தா ல் அடுத்தது வாங்கினால் போதும் இது தான் மினிமலிசிட் என்பதன் விளக்கமா என்றும் தெரியவில்லை.தன்னுடைய நிலை என்னவென்பதை ஏற்கனவே நிலை நாட்டியவர்கள் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை எண்ணி பயப்பட வேண்டியதில்லை. ஆனால் தற்போது தான் சமூகத்தில் எழுச்சி பெற்று வரும் மக்கள், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை யோசித்து தான் செயல்பட முடியும். நல்ல சம்பளத்தில் வாழ்ந்து அதன் பிறகு அதில் மனம் நிம்மதி இல்லாததை உணர்ந்து மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்பவர்கள் முதல் தலைமுறையில் நல்ல துணியை போடுபவன் மனிதில் குற்ற உணர்ச்சியையே உண்டாக்குகிறார்கள். மினிமலிஸ்ட்களை உலகம் கொண்டாவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? காந்தியே அவருடைய ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் போல் உடை உடுத்தி அதை குடும்பத்தினரிடமும் திணித்தவர் த...