செங்கல்பட்டிற்கு அருகே செட்டிமேடு பதூர் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடப்பதை அறிந்து கொண்டு அங்கே சென்று பார்த்தோம். நாங்கள் இப்போதிருக்கும் கருங்குழியில் இருந்து இருபது நிமிட பயணம் மட்டுமே செட்டிமேடு பதூர். இவ்வூர் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களை மீடியாக்கள் ஏற்கனவே பதிவு செய்துவிட்டன. அதனுடைய இணைப்புகளை முடிவில் தந்திருக்கிறேன். அகழ்வராய்ச்சி மாணவர்களை பற்றியும் அவர்களுடைய பேராசிரியர்களைப் பற்றியும் மட்டுமே நான் எழுதுகிறேன். நாங்கள் அவ்விடத்தை அடைந்தபோது கல்லூரி மாணவ மாணவிகள் வெயிலை பொருட்படுத்தாமல் சிலை செதுக்குவதை போல மண்ணை உள் நோக்கி மிகக் கவனத்துடன் செதுக்கி கொண்டிருந்தனர். செதுக்கும் மாணவர்க்கு உதவியாக மாணவிகளும் அவர்கள் கூறும் விசயங்களை குறிப்பெடுத்து எழுதும் மாணவர்களும் என முழுக்க முழுக்க இளம் தலைமுறையினர் மட்டுமே இருந்தனர். வரலாற்றை தோண்டுவது என்று தான் தேய்ந்த சொல்லாட்சியை கேள்விபட்டிருக்கிறோம். இங்கே பழங்கால வரலாற்றை செதுக்குவதை நாங்கள் கண்டோம். ஒரு கேக் வெட்டுவதை ப...