கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடத்திற்கு இன்று சென்றோம். வாயில் முகப்பில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்யும் கீதா உபதேச சித்திரம் வரையப்பட்டிருந்தது. சட்டென்று அனைத்துமே புள்ளி வைத்த கோலமாக தெரிந்தது. உள்ளே சென்றதும் ருக்மணி அருண்டேல் புகைப்படம் அவருடைய ஐம்பது வயதில் எடுக்கப்பட்டிருக்கலாம் . பருத்தியிலிருந்து எப்படி பஞ்சை எடுக்கிறார்கள். பஞ்சிலிருந்து எப்படி நூலாக மாற்றுகிறர்கள் என கண் முன்னே செய்து காட்டினார்கள். இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தி பருத்தியில் இருக்கும் விதைகளை நீக்கினார்கள் . கைக்கு அடக்கமான பத்து சீமார் குச்சிகளை கொண்டு விதை நீக்கிய பஞ்சை மரப்பலகையில் வைத்து தட்டினார்கள். பஞ்சு , பஞ்சு பஞ்சாக மாறியது. அதன் பின்னர் வில்லை கொண்டு அதனுடைய பஞ்சை அதில் வைத்து நீவினார்கள். பஞ்சு மிருதுவாக மாறியது.இதை இரன்டு முறை செய்தார்கள். பஞ்சு நீளமாக நூலிழையாக மாறியது. அதன் பிறகு வாழை மட்டையில் பஞ்சு நூலிகளை வைத்து, ராட்டினத்தில் நூல் சுற்றும் ஊசியின் முனையை பஞ்சு நூலிழைகளுடன் சேர்த்து சுற்ற ஆரம்பித்தார்கள். நூல் கண்டில் ப...