Skip to main content

Posts

Showing posts with the label திரைப்படம்

ஆங்கில மொழி திரைப்படம் (Life With Father)

  1947- இல் வெளியான ஆங்கில மொழி   திரைப்படம் ஒன்றை பார்த்தேன். ஷேர் மார்க்கெட்_இல் இருக்கும் தந்தை, அவரது மனைவி மற்றும்  நான்கு ஆண்  குழந்தைகள் இவர்களின்  வாழ்வில் நடக்கும்   உரையாடல்கள், விவாதங்கள், மகிழ்ச்சியான  தருணங்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் இவற்றை மட்டுமே கொண்டு  ஒரு மனதிற்கு இனிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . ஞானஸ்தானம் எடுக்காமல் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ்ந்து வரும் தந்தை, அனைத்திலும் கெடுபிடியாக  நடந்து கொள்கிறார். அவருடைய அனைத்து செயல்களையும் புரிந்து கொண்டு  அதற்கு தகுந்த படி வாழ்வை கொண்டு செல்லும் மனைவி, சில நேரத்தில் அவர்  அளவு மீறி சத்தமிடும் பொது, ஷ்ஷ்ஹ் என்ற ஒரு சத்தம் மனைவியிடம் வந்ததும் அப்டியே அமைதியாக மாறிவிடுகிறார் . குழந்தைகளுக்காக அனைத்து தேவைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்கும் தந்தை. மற்ற நான்கு ஆண் பிள்ளைகளை கையாள்வதை போலவே கணவனையும் கையாள்கிறார் மனைவி.  கோபமாக எதையோ பேசிவிட்டு பியானோவை வாசிக்க ஆரம்பிக்கும் கணவர் அதன் மேலிடுக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்ததும் திரும்பவும் அவர்மேல் காதல் கொண்டு, மெல்லிசை ஒன்றை வாசித்து பாடுகிறா