நூலகத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கே மணி 4.20 ஆகியது. வீட்டுக்கு வந்ததுதும் உடனடியாக பாத்திரங்களை கழுவி வைத்தேன். அடுத்து அடை மாவு அரைத்தேன்.இனிப்பு பணியாரம் செய்வதற்கான மாவு அரைத்தேன். அரிசி கொஞ்சம் ஊற வைத்து, காலையிலேயே ஊறவைத்து விட்டு போன அனைத்து பருப்பு வகைகளுடன் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்தேன். இன்னுமும் பொரி உருண்டையையும், நிலக்கடலை உருண்டையும் செய்ய வேண்டும். அடை செய்வதற்கும், இனிப்பு பணியாரம் செய்வதற்கும் தேங்காய் வேண்டும். அதை உடைக்க வேண்டும். மணி 6 ஆகியிருந்தது. இன்னுமும் விக்னேஷ்வர் வீட்டுக்கு வரவில்லை. நான் வீட்டை கூட்டி முடித்தேன். விக்னேஷ்வர் வந்து விட்டார். உடனடியாக தேங்காய் உடைத்து, பருப்பு ஆடை மாவிலும், இனிப்பு பணியாரத்தில் போட்டேன். விக்னேஷ்வரை நிலக்கடலையை தோல் நீக்க சொல்லிவிட்டு, நான் சமைப்பதில் மும்முரமாக இருந்தேன். இனிப்பு பணியாரம் ஊற்றி முடித்ததும், அடை மாவிலும் பணியாரத்தையே செய்தேன். ஊற வைத்த கடலை பருப்பை வேக வைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து லட்டு பிடித்தேன்....