Skip to main content

Posts

Showing posts from September, 2023

சீயமங்கலம்.....

        எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது இப்போது . தார் ரோடுகள் அனைத்து இடங்களையும் இணைக்கின்றன. பயணம் செய்யும் போதெல்லாம் அரசு நிர்வாகங்களை நினைத்து பெருமையாக உணர்கிறேன். வந்தவாசி அருகே தெள்ளாறை தாண்டி தேசூரை தாண்டி , தூணாண்டர் கோவில். இடையில் கீழ்நமண்டி அகழாய்வு செல்லும் வழி என போர்டு இருந்தது. முதலில் சீயமங்கலம் சென்றுவிட்டு வரும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றோம். கோவில் அருகே வரும் போதே அங்கே இருந்த அம்மா ஒருவர் வண்டியை அங்கேயே நிறுத்தசொல்லி பதட்டமாக வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கோவிலின் முன் இறங்கி நின்றோம். இங்கதான் வந்தீங்களா? அந்தப்பக்க ரோட்டுல திரும்பிரூவீங்கலோன்னு நெனச்சு வண்டிய நிறுத்த சொன்னேன். அந்த ரோட்டுல நல்ல பாம்பு ஒண்ணு  பத்தி விரிச்சு ரொம்ப மெதுவா நகந்து போயிட்டு இருந்துச்சு. ரெண்டு கை  வண்ணத்துல இருந்துச்சு என்று பயமும் பரவசமும் பொங்க கூறினார்.  கோவில் கேட் பூட்டியிருந்தது. எப்போ திறப்பாங்க என்று கேட்டோம். வாட்சமேன் கிட்டதான் சாவி இருக்கும் , இந்த போர்டுல நெம்பர் இல்லீங்களா? என்றார் அந்த அம்மா.இல்லையென்று தலையாட்டிவிட

மேல்சித்தாமூர்.....

நண்பகலில் பெய்த மழையில் பூமி இன்னமும் குளிர்ச்சியாக இருந்தது. காற்றிலும் குளிர் வாசனை அடித்தது. ஆனாலும் வானில் தண்ணென்ற வெளிச்சமும் இருந்தது.  இதமான வெண்மை நிறத்தில் , கோபுரங்களில் இருக்கிறதா இல்லையா என்ற வண்ணத்தில் மெல்லிய பிங்க் நிறமும் , நுண்ணிய தங்க நிறமும் ஆங்காங்கே நேர்த்தியாக பூசப்பட்டிருந்த பெரிய மரக்ககதவுகளுடன் கூடிய மலைநாதர் ஜைன கோவில் . மழை பெய்யலாமா , வேண்டாமா என்ற தயக்கத்துடன் மேகங்கள் சூழ இருந்த மாலையில் மேல்சித்தாமூர் சமண கோவிலின் வெளியே நின்றிருந்தோம்.  கோவில் பூட்டியிருந்தது. சமண மடத்திற்கு செல்வோம் என்று சுற்றி வரும் போது பழையபாணி ஓடுகளுடன் கூடிய இரண்டடுக்கு வீடுகள். நிச்சயம் ஒவ்வொரு வீடுகளுக்கும் நூறாண்டு பழமை இருக்கும். ஒவ்வொரு வீட்டின்  வெளியேயும் இருபக்கங்களில் சிறு கல் தொட்டிகளில் நீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நாய் சட்டென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தது. விலங்குகள் கூட ஊரின் தன்மையை கொண்டிருந்தன. மாலை நேரமும் கல்கட்டிங்களும், பழையபாணி வீடுகளும் பழம்பெருமை வாய்ந்த ஊர்களும் நம்மை தன்வசம் இழக்கச் செய்ப