அன்னபூர்ணியின் பொழுதுகள் - 6 சில வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் அன்னபூர்ணி மகிழ்ச்சி அடைகிறாள். விக் ... னேஷ் ... வர்.... என ராகம் போட்டு அழைக்கும் போது சிரித்தாள். இங்க பாருங்க உங்க பேர் கேட்டதும் சிரிக்கறா! என கூறினேன். நான் அழைத்ததை போன்ற ராகத்தில் "ஒரு கிலோ கத்திரிக்காய்!" என பேசினார். அதற்கும் சிரித்தாள் அன்னபூர்ணி. மனோ , அவ உன்னோட குரல் ஏற்ற இறக்கத்தில வர ராகத்துக்கு தான் மகிழ்ச்சி அடைகிறாள். பேருக்கு இல்லை. பேர் எல்லாம் தெரிந்து கொள்ள இன்னும் இரண்டு மாத காலம் ஆகும் என்றார் விக்னேஷ்வர். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026