Skip to main content

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5

 அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5


விளையாடிக் கொண்டிருக்கும் போது அன்னபூர்ணியின்  பாதங்களை எடுத்து என் கண்ணுக்கு மேல் வைத்தேன். அவளுடைய பாதத்தின் குளிர்ச்சி என் கண்களின் வெம்மையை தணித்தது . விக்னேஷ்வரிடமும் அப்படி செய்து பார்க்கும் படி கூறினேன்.  அதே போல் செய்த பிறகு , கண்களை மூடிக்  கொண்டே உணர்ச்சி ததும்ப , ஒரு வேளை சிவனின் பாதங்கள் கண்ணப்பநயினாருக்கு இப்படி தான் குளிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றார் விக்னேஷ்வர் .

Manobharathi Vigneshwar

Raja Annamalaipuram

May - 23, 2026