அன்னபூர்ணியின் பொழுதுகள்
விக்னேஷ்வர் முகத்தை பார்த்ததும் குதூகலமாகி விடுகிறாள் அன்னபூர்ணி.
அப்பா என்று அவளுக்கு தெரிகின்றதா? அவரிடம் மட்டுமே காட்டுவதற்கு தனி சிரிப்பும், புன்னகையும்,முகபாவமும் வைத்திருக்கிறாள். அவர் வரும் வரை அந்த பொக்கிஷத்தை யாருக்கும் தெரியாமல் எங்கே வைத்திருப்பாளோ?
அவரிடம் சென்ற பிறகு என்னை பார்த்து ஒரு புன்முறுவல் செய்வாள்.நான் எங்கே இருக்கிறேன் பார்த்தாயா? என்பது போல இருக்கும் அவளின் முகபாவம்.
அவரிடம் மட்டுமே பேசுவதற்கு தனி மொழியை கற்றுக்கொண்டுள்ளாள். அவருக்கு அந்த மொழி புரியவில்லை என்றாலும், என்னிடம் அவள் பேசும் மொழிக்கும் அவரிடம் பேசும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து பெருமை கொள்கிறார்.
Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
May - 20, 2026