அன்னபூர்ணியின் பொழுதுகள்
அன்னபூர்ணிக்கு இப்போதைக்கு பிடித்தமானதாக இருப்பது , மின்விசிறி காற்றினால் அலைக்கழியும் காலண்டர் தாள்கள். அவை அசையும் போதெல்லாம் அதை பார்த்து மகிழ்ச்சியை சிறு சப்தமாக கொடுக்கிறாள். ஏன் காற்றில் ஆடும் பொருட்கள் ஐந்து மாத குழந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது?.
தனக்கு தானே விளையாடி, கை கால்களை அசைத்து மகிழ்ந்து , சற்று நேரம் எதையோ சிந்தித்து மிக அமைதியாகி , பின்னர் திரும்பவும் கைகளை அசைத்து வேறு சிந்தனைக்கு செல்கிறாள்.அவளுள் அவள் முழுமையாக இருக்கும் நேரத்தில் , அதை ஊழ்கம் என்று கூட அழைக்கலாம். அப்போதெல்லாம் அன்னை அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த தருணம் முழுமை பெற்று உலகியலுக்கு திரும்பும் நேரத்தில் மட்டுமே என்னை தேடுகிறாள்.
Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
May - 21, 2026