உள்ளான் பறவையின் தியான மையம் ..... சூரியன் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்தது. சிவப்பு வெளிச்சம் ஏரி எங்கும் பரவி இருந்தது. ஈசல்கள் பறப்பதற்கு நேரம் பார்த்து கொண்டிருந்தன. வெளியே வானிலை எப்படி இருக்கிறது? என்று கேட்டது பாட்டி ஈசல் . குட்டி ஈசல் அமைதியாக ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருந்தது. அட குட்டி! என்னாச்சு ? ஏன் பேச மாட்டேங்கிறாய்! பாட்டி ! நான் வெளியே வானிலை எப்படி இருக்கிறது என்று பார்க்க சென்றேன்! ஆமாம்! அதன் பிறகு தான் நீ எதுவுமே பேச மாட்டேங்கிறாயே! நான் ஒரு விளம்பரப் பலகையை பார்த்தேன்! என்னால் அதை நம்பவே முடியவில்லை! என்ன விளம்பரம்? உள்ளான் பறவையின் தியான மையம் குருஜி: நெடுங்கால் உள்ளான் இடம்: சதுப்புநிலம் நேரம் : காலை 4-5 மாலை 5-6 இது தான் அந்த விளம்பரத்தில் இருந்தது! இதை கேட்டதும் மற்ற அனைத்து ஈசல்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டன! உள்ளான் பறவைக்கு என்னவாயிற்று...