உள்ளான் பறவையின் தியான மையம் .....
சூரியன்
மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்தது. சிவப்பு
வெளிச்சம் ஏரி எங்கும் பரவி இருந்தது.
ஈசல்கள்
பறப்பதற்கு நேரம் பார்த்து கொண்டிருந்தன.
வெளியே
வானிலை எப்படி இருக்கிறது? என்று கேட்டது பாட்டி
ஈசல் .
குட்டி
ஈசல் அமைதியாக ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருந்தது.
அட
குட்டி! என்னாச்சு ? ஏன் பேச மாட்டேங்கிறாய்!
பாட்டி
! நான் வெளியே வானிலை எப்படி இருக்கிறது என்று பார்க்க சென்றேன்!
ஆமாம்!
அதன் பிறகு தான் நீ எதுவுமே பேச மாட்டேங்கிறாயே!
நான்
ஒரு விளம்பரப் பலகையை பார்த்தேன்!
என்னால்
அதை நம்பவே முடியவில்லை!
என்ன
விளம்பரம்?
உள்ளான்
பறவையின் தியான மையம்
குருஜி:
நெடுங்கால் உள்ளான்
இடம்:
சதுப்புநிலம்
நேரம்
: காலை 4-5 மாலை 5-6
இது
தான் அந்த விளம்பரத்தில் இருந்தது!
இதை
கேட்டதும் மற்ற அனைத்து ஈசல்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டன!
உள்ளான்
பறவைக்கு என்னவாயிற்று என்று யோசித்தது பாட்டி ஈசல்!
தியான
மையம் நடத்தும் ஆளை பார்! உள்ளான் பறவைக்கும்
தியானத்திற்கும் என்ன சம்பந்தம்?! என்று மற்ற பணியாளர் ஈசல்கள் பேசி சிரித்தன!
இன்று
இரவு நான் சென்று உள்ளான் பறவையை பார்த்து வருகிறேன்! என்றது பாட்டி ஈசல் .
பாட்டி நானும் கூட வருகிறேன்! என்றது குட்டி ஈசல்.
இதை
கேட்டு கொண்டிருந்த அப்பா ஈசல் கோபப்பட்டது.
எந்த
ஈசலாவது ஒரு பறவையை தேடி செல்லுமா?
பறவைகள் நம்மை உணவாக உட்கொள்பவை! அவை எப்படி நம்மிடம் பேசும்?
என்று கேட்டது அப்பா ஈசல்.
அதனால்
தான் இரவில் செல்கிறேன்!
இரவில்
பறவைகளால் பெரிதாக வேட்டையாட முடியாது. நாம் மண்ணோடு மண்ணாக படுத்து விட்டால் அவற்றால்
அடையாளம் காண முடியாது. பறந்து கொண்டிருந்தால்
மட்டுமே நம்மை சுலபமாக வேட்டையாடிவிடும்! என்றது பாட்டி ஈசல்!
பாட்டி
பேசுவதை பெருமையாக பார்த்து கொண்டிருந்தது குட்டி ஈசல்.
செல்வோமா?
என்றது பாட்டி ஈசல்!
குட்டி ஈசல் ஓடி வந்தது.
வெளியே
வெயிலும் காற்றும் இல்லாத அழகிய வானிலை இருந்தது.
ஓசனித்தல் எப்போது ? என கேட்டது குட்டி ஈசல்.
பூ நாரை அழைப்பிதழ் அனுப்பும்! காத்திருப்போம்! என்றது பாட்டி ஈசல்.
ஈசல்கள்
பறக்காமல் மண்ணில் ஊர்ந்து சென்றன.
நமக்கு
நான்கு சிறகுகள் இருக்கிறதே ! நம்மால் பறக்க முடியுமே ! என்றது குட்டி ஈசல்..
நம்மால்
வெகு தொலைவு பறக்க முடியாது! நாம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்முடைய சிறகுகள்
உதிர்ந்து விடும். !
அதன்
பிறகு?
நம்
மண்ணில் ஊர்ந்து செல்வோம். இப்போது ஊர்ந்து செல்வது நம்முடைய பாதுகாப்பிற்காக!
நீ
ஆசைப்படும் போது வெளியே பறக்கலாம்! என்றது
பாட்டி ஈசல்.
உள்ளான்
பறவை தனியாக, சோகமாக அமர்ந்திருந்தது!
அதற்கு
எட்டாத தொலைவில் இருந்து பாட்டி ஈசல் பாடியது .
உள்ளான் பறவையே ! நலமா?
உன்
உள்ளத்திற்குள் நலமா?
சிடுசிடுவென
பறப்பாயே !
கடுகடுவென
இருப்பாயே !
உனக்கு
எதற்கு தியானம்?
அதற்கு
எதற்கு மையம் ?
உள்ளான் பறவை பெருமூச்சு விட்டது!
அனைத்திற்கும்
காரணம் மனிதர்களே !
அனைத்திற்கும்
காரணம் மனிதர்களே !
என்று பாடியது உள்ளான் பறவை .
நான்
எவ்வளவு தூரம் பறந்து வருகிறேன்! உனக்கு தெரியும் அல்லவா?
தெரியும்!
தெரியும்!
மனிதர்கள்
ஏதோ செய்தார்கள் என்றாயே!
நான்
நிலத்தை தோண்டி கூடு கட்டி கொண்டிருந்தேன்! அப்போது இரண்டு மனிதர்கள் பேசுவதை கேட்டேன்!
என்ன
பேசினார்கள்?
அதில்
ஒரு மனிதன் படபடப்பாக இருந்தான்!
செரி
! அதற்கென்ன?
அவனை
பார்த்து இன்னொரு மனிதன் கேட்டான் !
எதுக்கு
உள்ளனாட்டம் அடிச்சுக்கறே !?மொதல்ல தியானம் பண்ணி மனச சமநிலைக்கு கொண்டுவா ! என்று
கூறினான் !
ஓ!
அது தான் உன் பிரச்சினையா?
ஆமாம்
! பறக்கவே தெரியாத மனிதர்கள் எப்படி என்னை கேலி செய்யலாம்?
நான்
எப்போதும் படபடவென இருப்பதால் தானே! அதனால் நான் அனைத்து பறவைகளுக்கும் தியானம்
சொல்லி கொடுக்க போகிறேன்! என்று லட்சியத்துடன் கூறியது உள்ளான் .
உள்ளான்
பறவையே ! மனிதர்களின் அறிவு உனக்கு தெரியாதா?
ஈசல்கள்
ஒருநாள் மட்டுமே வாழும் ! என்று நம்பி கொண்டிருக்கிறார்கள்!
நாங்கள்
இறக்கைகளை மட்டும் தான் உதிர்ப்போம், பிறகு
ஊர்ந்து சென்று மண்ணில் கூடு கட்டி பத்து , பனிரெண்டு ஆண்டுகள் வரை வாழ்வோம் என்பதை
அவர்கள் அறிய மாட்டார்கள்! என்பது பாட்டி ஈசல்.
பாவம் மனிதர்களுடைய அறிவு அவ்வளவு தான்! என்று உச்சு
கொட்டியது குட்டி ஈசல்.
அப்படியா
நம்பி கொண்டிருக்கிறார்கள்? என்று ஆச்சர்யமாக கேட்டது உள்ளான்.
ஆமாம்
! ஒருநாள் வாழும் ஈசல் போல! என்று தத்துவம் வேறு பேசுவார்கள்!
இதை
கேட்டு உள்ளான் விழுந்து விழுந்து சிரித்தது.
மனிதர்கள்
தான் இயற்கையிலிருந்து விலகி விட்டார்கள்! அவர்களுக்கு தான் இந்த தியானம் எல்லாம் தேவை!
நாம்
இயற்கையில் மட்டுமே வாழ்பவர்கள்! நமக்கு அதுவே
ஒரு தியானம் தான் என்றது பாட்டி ஈசல்!
உள்ளான்
பறவையின் முகத்தில் தெளிவு வந்தது!
நான்
தானே உள்ளான் பறவை !
நான்
தானே உள்ளான் பறவை !
பறவைக்கு
எதற்கு தியானம்?
அதில்
என்ன இருக்கு நியாயம்?
படபடவென
பறப்பேனே!
சிடுசிடுவென
நடப்பேன!
நான்
தானே உள்ளான் பறவை !
நான்
தானே உள்ளான் பறவை !
என்று
பாடி கொண்டே ஈசல்களின் அருகில் மெதுவாக வந்தது
உள்ளான்.
அதற்குள்
பாட்டி ஈசலும், குட்டி ஈசலும் வேகமாக மண்ணுக்குள் நுழைந்து தங்களை பாதுகாத்து கொண்டன!
வாழ்வோமே!
நாங்கள்
வாழ்வோமே!
மண்ணுக்குள்
மறைந்திருந்து வாழ்வோமே!
வானிலையை
அறிவோமே !
மனிதர்களையும் அறிவோமே !
உள்ளானிடம்
தப்பித்தோமே!
மண்ணுக்குள்
மறைந்திருந்து வாழ்வோமே!
என்று
மகிழ்ச்சியாக பாடிக்கொண்டே சென்றது குட்டி ஈசல்!
-
Manobharathi Vigneshwar