Skip to main content

Posts

வீடு என் வீடு.....

 சோபாவில் வந்து அமர்ந்தால் ஜன்னலின் வழியே தெரிவது எதிர்வீட்டின் உப்பரிகை தான். முகலாயபாணியில் கட்டப்பட்ட வீட்டின் முகப்பும் , உப்பரிகையும் நான் பார்த்ததும் மலர்ச்சி கொள்வது போல தோன்றும். மனிதர்கள் வீட்டை எத்தனை வடிவங்களில் கட்டுகிறார்கள். அதை அவர்கள் தினந்தோறும் ரசித்து மகிழ்ச்சியாக பார்க்கிறார்களா ? எத்தனை பேர் தங்களுடைய வீட்டை வெளியில் நின்று வருடத்தில் ஒரு நாளேனும் ரசிக்கிறார்கள். வீட்டின் வடிவங்களை பார்ப்பவர்கள் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர்களே எனத் தோன்றுகிறது. அவர்களும் ஜன்னலைத் திறந்தால் மட்டுமே.  நாங்கள்  கருங்குழியின் வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இரண்டரை வருடங்களாக ஜன்னலையே திறந்தததில்லை. கதவும் சாத்தியே இருக்கும். என் மனதையே  அப்படித்தான் வைத்திருந்தேனோ என இப்போது தோன்றுகிறது. ஏதோ ஒரு நாள் காலையில் திடீரென வீட்டின் அனைத்து ஜன்னல்களையுமே திறந்து வைத்தேன். வீடே குளுமையாகவும் , வெளிச்சமாகவும் மாறியது. இதற்கும் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்பட்டிருந்தாலும் நான் திறந்து வைக்க விரும்பாமல் இருந்த காரணத்தை என்னால் யூக

பேராசிரியர் டாக்டர். ஜினு கோஷியும் மாணவர்களும் ......

      செங்கல்பட்டிற்கு அருகே செட்டிமேடு பதூர் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடப்பதை அறிந்து கொண்டு அங்கே சென்று பார்த்தோம். நாங்கள் இப்போதிருக்கும் கருங்குழியில் இருந்து இருபது நிமிட பயணம் மட்டுமே செட்டிமேடு பதூர்.  இவ்வூர் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களை மீடியாக்கள் ஏற்கனவே பதிவு செய்துவிட்டன. அதனுடைய இணைப்புகளை  முடிவில் தந்திருக்கிறேன்.  அகழ்வராய்ச்சி மாணவர்களை பற்றியும் அவர்களுடைய பேராசிரியர்களைப் பற்றியும் மட்டுமே நான் எழுதுகிறேன்.   நாங்கள் அவ்விடத்தை அடைந்தபோது கல்லூரி மாணவ மாணவிகள் வெயிலை பொருட்படுத்தாமல் சிலை செதுக்குவதை போல மண்ணை உள் நோக்கி மிகக் கவனத்துடன் செதுக்கி கொண்டிருந்தனர். செதுக்கும் மாணவர்க்கு உதவியாக மாணவிகளும் அவர்கள் கூறும் விசயங்களை குறிப்பெடுத்து எழுதும்  மாணவர்களும் என முழுக்க முழுக்க இளம் தலைமுறையினர் மட்டுமே இருந்தனர். வரலாற்றை தோண்டுவது என்று தான் தேய்ந்த சொல்லாட்சியை கேள்விபட்டிருக்கிறோம். இங்கே பழங்கால வரலாற்றை செதுக்குவதை  நாங்கள் கண்டோம்.  ஒரு கேக் வெட்டுவதை போல படிப்படியாக மண்ணை இவ்வளவு அழகாக அகழ்ந்தெடுக்க முடிய

ஜிலேபி மீனும் ஈசூர் அணைக்கட்டும்......

              பனியில் மூழ்கியிருந்த வீடுகளின் இருளில் எங்கள் வீட்டில் மட்டுமே டியூப்லைட்  அதிகாலை நான்கு மணிக்கே எரிந்து கொண்டிருந்தது என்பதை வெளியில் வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது தான் உணர்ந்தோம்.  குளித்து முடித்து திருநீறை உடலெங்கும் பூசியிருந்த சிடுசிடு சைக்கிள் தாத்தா , பிள்ளையார் கோவிலுக்குள் செம்புக்குடம் நிறைய தண்ணீருடன் சாந்தமான முகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்.  அதிகாலை மனிதர்களை இவ்வளவு அழகானவர்களாக மாற்றி விடுவதன் மாயம் என்னவென்றே தெரியவில்லை.  கருங்குழியின் தெருக்களை கடந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டிலும் வாசல் மின்விளக்கை போட்டபடி தூக்க கலக்கத்துடனே இருந்த பெண்கள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். அதிகாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் அந்திமாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் கொண்டிருக்கும் கதைகள் ஏராளம். இரவு முழுக்க நிலவுக்கும் தனக்குமாக நிகழ்ந்த உரையாடல்களை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ரகசியப் புன்னகையின் மணமே அதிகாலை வாசல் தெளிக்கும் போது மண்ணிலிருந்து எழும் மணம். பகல் முழுக்க சூரியனுடன் சேர்ந்து தன்ன

தக்கோலம்...

திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி பாரதத்தின் கடற்படை விமான நிலையத்தின் சுற்றுசுவரை  பெருமையுடன் பார்த்துக் கொண்டே வந்தேன். கல்லாறு பாலத்தை தாண்டி காஞ்சிபுரம் செல்லும் வழியில் கார் திரும்பியபோது தக்கோலம் 8 கி.மீ என்ற வழிகாட்டி பலகையை பார்த்ததும் சிறு துணுக்குறல் வந்தது. தக்கோலம் இதை நான் எங்கேயோ படித்திருக்கிறேன்.    சோழர்களுக்கும் , ராஷ்ட்ரகூடர்களுக்கும்  போர் நடந்த இடம் இந்த தக்கோலம் தான். சோழர்களின் ஆட்சி சரிய காரணமாக இருந்த தக்கோலப் போர். உடனடியாக காரை தக்கோலத்தை நோக்கி திருப்ப சொல்லிவிட்டு ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். எந்த இடத்தில் போர் நடந்திருக்கும்? ராஜாதித்யா யானை மீதமர்ந்து போர் புரியும் போது ராஷ்ட்ரகூட இளவரசனின் அம்புகள் பட்டு யானை மீதே இறந்ததாக வரலாறு இருக்கிறது. யானைப்படை இங்கே எந்த இடத்தில் நின்றிருந்திருக்கும்? குதிரைப்படையும் , காலாட்படையும் என எத்தனை படைவீரர்கள் இங்கே சண்டையிட்டுருப்பார்கள்? ராஷ்ட்ரகூடர்கள் எங்கே நின்றிருந்திருப்பார்கள் ? அப்போதைய அவர்களுடைய உரையாடல்கள் என்னவாக இருந்திருக்கும். போரின் மனநிலைகள் எ

ஆங்கில மொழி திரைப்படம் (Life With Father)

  1947- இல் வெளியான ஆங்கில மொழி   திரைப்படம் ஒன்றை பார்த்தேன். ஷேர் மார்க்கெட்_இல் இருக்கும் தந்தை, அவரது மனைவி மற்றும்  நான்கு ஆண்  குழந்தைகள் இவர்களின்  வாழ்வில் நடக்கும்   உரையாடல்கள், விவாதங்கள், மகிழ்ச்சியான  தருணங்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் இவற்றை மட்டுமே கொண்டு  ஒரு மனதிற்கு இனிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . ஞானஸ்தானம் எடுக்காமல் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ்ந்து வரும் தந்தை, அனைத்திலும் கெடுபிடியாக  நடந்து கொள்கிறார். அவருடைய அனைத்து செயல்களையும் புரிந்து கொண்டு  அதற்கு தகுந்த படி வாழ்வை கொண்டு செல்லும் மனைவி, சில நேரத்தில் அவர்  அளவு மீறி சத்தமிடும் பொது, ஷ்ஷ்ஹ் என்ற ஒரு சத்தம் மனைவியிடம் வந்ததும் அப்டியே அமைதியாக மாறிவிடுகிறார் . குழந்தைகளுக்காக அனைத்து தேவைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்கும் தந்தை. மற்ற நான்கு ஆண் பிள்ளைகளை கையாள்வதை போலவே கணவனையும் கையாள்கிறார் மனைவி.  கோபமாக எதையோ பேசிவிட்டு பியானோவை வாசிக்க ஆரம்பிக்கும் கணவர் அதன் மேலிருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்ததும் திரும்பவும் அவர்மேல் காதல் கொண்டு, மெல்லிசை ஒன்றை வாசித்து பாடுகிறா