Skip to main content

Posts

2023 _ மீள்பார்வை

  2023 _  மீள்பார்வை ஒலிப்பதிவு செய்த புத்தகங்கள்...  1. கானகத்தின் குரல் 2. கோயில் யானை 3. மூதுரை 4. நாரத ராமாயணம் 5. மனிதன் சூழ்நிலையின் தலைவன் 6. டோட்டோசான்‌ / ஜன்னலில் ஒரு சிறுமி 7. நான் கண்ட காந்தி 8. மூன்று சிறுகதைகள் வாசிப்பு அனுபவ  கட்டுரைகள் : 1. நாரத ராமாயணம் வாசிப்பு அனுபவம் 2. டோட்டோசான் வாசிப்பு அனுபவம் 3. கோயில் யானை வாசிப்பு அனுபவம் பொது கட்டுரைகள் : 1. கல்வி , பொருளாதாரம் பெண்களுக்கு சுதந்திரம் தருகிறதா? 2. விளம்பரங்களின் உலகம் பயண கட்டுரைகள் : 1. செட்டிநாடு  2. மேல் சித்தாமூர் சிறார் கதைகள் :  1. டுடூம் நூலகம் 2. மீனுகா பயணங்கள் : 1. மேல்சித்தாமூர் ஜைன மடம் 2. மாமல்லபுரம் 3. சீயமங்கலம் சிவன் கோவில் 4. பாண்டிச்சேரி 5. காரைக்குடி 6. ராமேஸ்வரம் 7. தூத்துக்குடி 8. திருநெல்வேலி  9. கோவில்பட்டி 10. கயத்தாறு 11. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 12. கன்னியாகுமரி 13. நாகர்கோயில் 14. தொட்டிபாலம் 15. திற்பரப்பு அருவி 16. திருவரம்பு விஷ்ணு கோவில் 17. திருப்பரங்குன்றம் 18. மதுரை அணைப்பட்டி 19. குலதெய்வம் கோவில் 20. பழனி கோவில் தரிசனம் 21. திருப்பதி 22. I...

செட்டிநாடு.....

  எந்த நீர்மையின் மீதிருந்த வெறுப்பினால் தலைமுடி கூட கருகும் வெயில் பிரதேசத்தில் வாழ முற்பட்டார்கள் ?   மிகப் பெரிதான வீடுகளின் அமைப்பு  எதையோ நோக்கி அறைகூவல் விடுப்பது போலவும் அவற்றில் உறையும் ஆழ்ந்த அமைதி மனதை நிலை குலையச் செய்வது போலவும் ஒரே சமயத்தில் இரு வேறு உணர்வுகளை தந்தது. அனைத்து வீடுகளும் ஒரே காலக்கட்டத்தை சார்ந்தவை.  ஒரு  சமூகத்தின் மாபெரும் எழுச்சி. அச்சமூகத்தின் முன்னோர்களின் ஆழ்கனவுகள்.   எவ்வளவு பெரிய சரிவை சந்தித்திருந்தால் இவ்வளவு உயரம் எழும்பி வரும் ஆன்ம வல்லமையை அச்சமூகம் பெற்றிருக்ககூடும் ? வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு தெருவில் ஆரம்பித்து இன்னொரு தெருவில் தங்களை நிறைவு செய்திருந்தன.  புழுதி பறக்காத அகண்ட தெருக்கள்.  கழிவுநீர் செல்லும் வழி எதுவென்றே தெரியாத அளவிற்கான கட்டிட நுட்பம்.  ஒவ்வொரு வீட்டின் கீழ்தளத்திலும் குதிரை வண்டிகள் நிற்பதற்கான அறைகள் கதவுகளுடன் இருந்தன. முதற்தளத்தில் தான் வீடுகளே ஆரம்பிக்கின்றன.எந்த ஆழத்திலிருந்து தப்புவதற்காக இவ்வளவு உயரமான வீடுகளை கட்டமைத்தனர் ?   ஒவ்வொரு வீட்டிலும் முன் வாய...

நாம் விளம்பரங்கள் மட்டும் தானா?

  காலனியாதிக்கத்தில் இந்தியாவின் செல்வத்தை பல வகைகளில் எடுத்து சென்ற வெளிநாட்டவர்கள் தற்போது மக்கள் வளத்தை , தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கேயோ இருந்து கொண்டு தங்களுடைய பொருட்களை  சந்தை படுத்துவது என்பது வரை வந்திருக்கிறார்கள்.  வெளிநாட்டவர்கள் இந்திய மனதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஆணோ , பெண்ணோ இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுவதைப் போல வீடியோக்கள் வெளியிட்டால் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பல கோடி கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் வெள்ளைக்கார வீடியோ பெண்ணோ , ஆணோ நல்ல வருமானத்தில் வாழ்வார்கள். இதைப் போன்ற வீடியோக்களை பார்ப்பவர்கள் சராசரி இந்தியர்கள் என்று வைத்துக் கொள்ள முடியும்.  அடுத்த வகை தங்களை இந்தியாவிலேயே வாழும் தனித்தன்மை உடையவர்களாக எண்ணிக் கொள்பவர்களுக்கான வீடியோக்கள். அப்பர் மிடில்க்ளாஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.  கொரியா மற்றும் ஜப்பான் , ஸ்கேண்டிலேவியா , இங்கிலாந்த் நாட்டை சார்ந்தவர்கள்  வெளியிடும்  வீடியோக்கள் வெறுமனே வீட்டின் நிகழ்வுகளை யாரும் குரல் கொடுக்காமல் , முகங்களை காட்டாமல்  மெல்லிய இசையு...

சீயமங்கலம்.....

        எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது இப்போது . தார் ரோடுகள் அனைத்து இடங்களையும் இணைக்கின்றன. பயணம் செய்யும் போதெல்லாம் அரசு நிர்வாகங்களை நினைத்து பெருமையாக உணர்கிறேன். வந்தவாசி அருகே தெள்ளாறை தாண்டி தேசூரை தாண்டி , தூணாண்டர் கோவில். இடையில் கீழ்நமண்டி அகழாய்வு செல்லும் வழி என போர்டு இருந்தது. முதலில் சீயமங்கலம் சென்றுவிட்டு வரும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றோம். கோவில் அருகே வரும் போதே அங்கே இருந்த அம்மா ஒருவர் வண்டியை அங்கேயே நிறுத்தசொல்லி பதட்டமாக வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கோவிலின் முன் இறங்கி நின்றோம். இங்கதான் வந்தீங்களா? அந்தப்பக்க ரோட்டுல திரும்பிரூவீங்கலோன்னு நெனச்சு வண்டிய நிறுத்த சொன்னேன். அந்த ரோட்டுல நல்ல பாம்பு ஒண்ணு  பத்தி விரிச்சு ரொம்ப மெதுவா நகந்து போயிட்டு இருந்துச்சு. ரெண்டு கை  வண்ணத்துல இருந்துச்சு என்று பயமும் பரவசமும் பொங்க கூறினார்.  கோவில் கேட் பூட்டியிருந்தது. எப்போ திறப்பாங்க என்று கேட்டோம். வாட்சமேன் கிட்டதான் சாவி இருக்கும் , இந்த போர்டுல நெம்பர் இல்லீங்களா? என்றார் அ...

மேல்சித்தாமூர்.....

நண்பகலில் பெய்த மழையில் பூமி இன்னமும் குளிர்ச்சியாக இருந்தது. காற்றிலும் குளிர் வாசனை அடித்தது. ஆனாலும் வானில் தண்ணென்ற வெளிச்சமும் இருந்தது.  இதமான வெண்மை நிறத்தில் , கோபுரங்களில் இருக்கிறதா இல்லையா என்ற வண்ணத்தில் மெல்லிய பிங்க் நிறமும் , நுண்ணிய தங்க நிறமும் ஆங்காங்கே நேர்த்தியாக பூசப்பட்டிருந்த பெரிய மரக்ககதவுகளுடன் கூடிய மலைநாதர் ஜைன கோவில் . மழை பெய்யலாமா , வேண்டாமா என்ற தயக்கத்துடன் மேகங்கள் சூழ இருந்த மாலையில் மேல்சித்தாமூர் சமண கோவிலின் வெளியே நின்றிருந்தோம்.  கோவில் பூட்டியிருந்தது. சமண மடத்திற்கு செல்வோம் என்று சுற்றி வரும் போது பழையபாணி ஓடுகளுடன் கூடிய இரண்டடுக்கு வீடுகள். நிச்சயம் ஒவ்வொரு வீடுகளுக்கும் நூறாண்டு பழமை இருக்கும். ஒவ்வொரு வீட்டின்  வெளியேயும் இருபக்கங்களில் சிறு கல் தொட்டிகளில் நீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நாய் சட்டென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தது. விலங்குகள் கூட ஊரின் தன்மையை கொண்டிருந்தன. மாலை நேரமும் கல்கட்டிங்களும், பழையபாணி வீடுகளும் பழம்பெருமை வாய்ந்த ஊர்களும் நம்மை தன்வசம்...