காலனியாதிக்கத்தில் இந்தியாவின் செல்வத்தை பல வகைகளில் எடுத்து சென்ற வெளிநாட்டவர்கள் தற்போது மக்கள் வளத்தை , தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கேயோ இருந்து கொண்டு தங்களுடைய பொருட்களை சந்தை படுத்துவது என்பது வரை வந்திருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் இந்திய மனதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஆணோ , பெண்ணோ இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுவதைப் போல வீடியோக்கள் வெளியிட்டால் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பல கோடி கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் வெள்ளைக்கார வீடியோ பெண்ணோ , ஆணோ நல்ல வருமானத்தில் வாழ்வார்கள். இதைப் போன்ற வீடியோக்களை பார்ப்பவர்கள் சராசரி இந்தியர்கள் என்று வைத்துக் கொள்ள முடியும். அடுத்த வகை தங்களை இந்தியாவிலேயே வாழும் தனித்தன்மை உடையவர்களாக எண்ணிக் கொள்பவர்களுக்கான வீடியோக்கள். அப்பர் மிடில்க்ளாஸ் என்று வைத்துக் கொள்ளலாம். கொரியா மற்றும் ஜப்பான் , ஸ்கேண்டிலேவியா , இங்கிலாந்த் நாட்டை சார்ந்தவர்கள் வெளியிடும் வீடியோக்கள் வெறுமனே வீட்டின் நிகழ்வுகளை யாரும் குரல் கொடுக்காமல் , முகங்களை காட்டாமல் மெல்லிய இசையு...