Skip to main content

Posts

டேபிள் டென்னிஸ் டோர்னமென்ட்....

  டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி என்று என் கணவர் கூறியதும் நாம் செல்லலாம் என்றேன் நான். சென்னைக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அலுவலகம் சார்ந்த அமைப்புகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அண்ணா நகரில் இருக்கும் SBOA பள்ளிக்கு செல்வதற்கே எங்களுக்கு நாற்பத்தைந்து நிமிடம் ஆகும். இருந்தாலும் சென்று தான் பார்ப்போம் என சென்றோம். காலை 7 மணிக்கு SBOA பள்ளிக்கு சென்றால் , விளையாட்டு போட்டிகள் SBOA மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது என செக்யூரிட்டி கூறினார். அதுவும் ஒரு ஐந்து நிமிட பயணம் தான்.  SBOA மெட்ரிக்குலேசன் என் கணவருக்கு மனதளவில் நெருக்கமான வளாகம். அங்கே தான் அவர் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படித்தார். கிரவுண்டில் காரை பார்க் செய்துவிட்டு சுற்றிப் பார்த்தார். மனோ , இந்த கிரவுண்ட் எவ்ளோ பெரிசா இருக்கும் தெரியுமா ? இப்போ எப்படி இவ்ளோ குட்டியா இருக்கு ? வேற ஏதாச்சும் பில்டிங் கட்டிட்டாங்களோ ? என அந்த குட்டி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வந்தார். எனக்கு சிரிப்பாக வந்ததது. ஏங்க , அப்போ நீங்க சின்ன பையனா இருந்திருப்பீங்க அதனால் உங்களுக்கு இதே கிரவுண்ட் ரொம்ப பெர...

ஐஐடி மாராத்தான் .....

மாராத்தான் உண்மையில் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது. நேற்றிரவு தான் 5கிமீ மாரத்தான் ஐஐடி மெட்ராஸில் நடப்பதை அறிந்து கொண்டோம். காலை ஐந்தரை மணியளவில் அங்கே இருக்க வேண்டும். நாங்கள் இருக்குமிடத்தில் இருந்து பத்து நிமிடம் தான் . ஆனால் நாங்கள் நான்கு மணிக்கே எழுந்து கொண்டோம். ஐந்து மணி ஆகும் போது காரில் பயணத்தை துவக்கினோம்‌ . வீட்டைத் தாண்டியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் கூட ரன்னிங் செல்பவர்கள் குறைவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். அடையார் ஆற்றங்கரையை கடக்கும் போது சாக்கடை நாற்றம் எடுத்தது. பகல் பொழுதுகளில் கடக்கும் போது வாகனங்களின் புகை , ஹார்ன் சத்தங்கள், ஆட்டோக்களின் இரைச்சலினாலும் சாக்கடை நாற்றம் அமுங்கி போகிறது. ஒருவேளை வெறிச்சோடியிருந்த அடையார் ஆற்றங்கரை பாலமும் ,  அதிகாலையும் ,  தூறல் மழையும் , சாக்கடை நாற்றத்தை தூண்டியிருக்கலாம் அல்லது எங்களின் கவனத்திற்கு வந்ததிற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.  ஐஐடிக்குள் நுழையும் போது செக்யூரிட்டி மாரத்தான் ஆ என்று கேட்க ஆம் என் கூறி உள்ளே சென்றோம். ஐஐடிக்குள் செல்வது எனக்கு முதல் முறை.  பொள...

ஆப்பிளின் நிலம்....

 ஆப்பிள் தனக்குள்ளே தான் விளைந்த நிலத்தை வைத்திருந்தது. நீள நீளமாக வெட்டி சாப்பிடும் போது விளை நிலம் கண்ணில் தெரிவதில்லை. இன்று முழு ஆப்பிளையும் கடித்து சாப்பிடும் போது தான் கவனித்தேன். பனித்துகள்களால் ஆன பிரதேசத்தை காண்பது போல் இருந்தது. பனியின் நுனியில் இருக்கும் மினுமினுப்பை கூட காண முடிந்தது.  மாவு போல் இருக்கும் ஆப்பிள் விக்னேஷ்வருக்கு பிடிப்பதில்லை. நான் எப்போதும் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மாவு போன்ற ஆப்பிளில் தான் கடித்த பிறகு அதனுள்  பனிப்பிரதேசத்தை கண்டேன். தன்னுடைய கனவை எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் கடந்து என்னிடம் சேர்த்திருக்கிறது.  கடித்த இடத்தில் சிறு  மரம் இருப்பது போலவும், நிறைய ஆப்பிள்கள் காய்த்திருப்பது போலவும் தோன்றியது தோற்றமயக்கம் தான் என்று தெளிவதற்கு சில நிமிடங்கள் ஆகியது. ஒவ்வொரு நிலமும் தன்னில் கனிந்து உருமாறியவை தான்  கனிக ள். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 01-11-2024

பாரிஜாதம்.....

 வீட்டின் பின் முற்றத்தில் உதிர்ந்திருந்த பாரிஜாதம் நாணத்தால் சிவந்து கண் மூடி புன்னகைப்பது போல இருந்தது.  பிரம்ம முகூர்த்தத்தில் மலர்ந்து சூரியனின் முதல் கீற்று முத்தத்தில் நாணி பரவசம் தாள முடியாமல் நிலத்தில் உதிர்கிறது. தோழியான வாழை மரமும் , தோழனான கொய்யா மரமும் கேலி செய்ய, வயதில் மூத்த தாத்தாக்களான மாமரமும் , பலா மரமும்  இதெல்லாம் இந்த வயதில் இருப்பது தானே என்ற பெருந்தன்மையான புன்னகையை கொடுக்க , இவர்களிடமிருந்து தப்பிக்கொள்ள பாரிஜாதம் விரல்களால் விழியை மூடிக் கொண்டு குளிர்ந்திருக்கும் நிலத்தை நோக்கி உதிர்ந்து புன்னகைத்தது. காற்றின் மெல்லிய தொடுகையில், தன் கனவை கலைத்ததற்காக சிறு சிணுங்கலுடன்  கண்களை திறப்பது போல சில பூக்கள் வானத்தை நோக்கி உதிர்ந்திருந்தன.  இவற்றில் எந்த மலரை எடுப்பது என்ற தயக்கத்திலும் , அச்சத்திலும் சில கணங்களை செலவிட்டேன். அணில்களின் சத்தமும் , காகத்தின் குரலும் கேட்க , நிலத்தின் குளிர் மணம் மறைய ஆரம்பித்ததும் விடியலை உணர்ந்த பாரிஜாதம் நாணம் விலகி முகத்தில் லட்சமிகரம் தவழும் இல்லாளை போல மாறியது. சிறிய நிம்மதி பெருமூச்சூடன் அச்சமும் தயக்கமும்...

ரங்கமன்னார்.....

 ரங்கமன்னார் என்ற பெயரையே இந்த நவராத்திரியின் போது தான் அறிந்து கொண்டேன். கோதையின் மடியில் தலை வைத்து உலகமே அது தான் என சுகஜீவனம் கொண்டிருந்தார் பெருமாள்.உலகையே தன் மடியில் வைத்திருக்கும் சிறு கர்வம் கூட இல்லாமல் கோதையின் முகம் வெகு சாதாரணமாக சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் இருந்தது.  கொலுவில் மேலிருந்து இரண்டாம் படியில் ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் இருந்த லக்ஷ்மியின் முகம் அபலை பெண் போல இருந்தது. பெருமாளோ உலகையே காத்துக் கொண்டிருக்கும் பெருமிதம் பரவிய குறு நகையில் இருந்தார்.  காதலிகளுக்கு மட்டுமே என்று சில முகபாவனைகளை கைக் கொள்கிறார்கள் ஆண்கள். காதலியின் மடியில் தலை வைத்தும், மனைவியினை காலடியில் வைத்தும் என்று சிலை வடித்த சிற்பியின் கற்பனை உருவாக காரணமாக இருந்த புராணக்கதை எழுதியவரை நினைத்து புன்னகை எழுகிறது. காதலிகளுக்கு என்றுமே வயதாவதில்லை.  Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 21-10-2024