Skip to main content

Posts

நாரத ராமாயணம்

 ராமாயணம் அனைவருக்கும் போலவே எனக்கும் மிகச்சிறிய வயதிலேயே அறிமுகமாகியது.  என்னுடைய சித்தப்பா , எப்போதும் வீட்டில் யாரிடம் பேசினாலும் ,  வெடிய வெடிய ராமாயணம் கேட்டு வெடிஞ்சு எந்திருச்சு சீதைக்கு ராமன் சித்தப்பனாமா  என்று கூறுவார். எனக்கு இருந்த சித்தப்பா அவர் தான். சீதைக்கும் , ராமனுக்கும் அவர் தான் சித்தப்பா என்றால் சீதையும் , ராமனும்  எனக்கு அக்கா , அண்ணனாகத்தான்  இருக்க முடியும் என்று  நினைத்தேன் நான். அம்மாவிடம் சென்று சீதை யார் என்று கேட்டேன். சீதையின் கதையை சொல்லி அம்மா அழுதாள். கஷ்டம் தாங்க முடியாம பூமிக்குள்ள போயிட்டா மகராசி என்றார் அம்மா. பாட்டி இறந்தபோது மண்ணுக்குள் புதைத்தது நியாபகம் இருந்தது எனக்கு.  சீதை என்னுடைய சொந்த அக்கா என்று நம்பி சீதையை நினைத்து தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன். யாரிடமும் எதையும் தெளிவாக கேட்காமல் நானே அனைத்தையும் கற்பனை செய்து விட்டேன். பாட்டிக்கு வருஷாந்திரம் கும்பிடும் போது யாருக்கும் தெரியாமல் சீதா அக்காவுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டேன். வளர வளர ராமாயணம் என்ற கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்றும் என்னுடைய சித்தப்பா சீதைக்கும், 

பூத்தொடுத்தல்....(அனுபவம்)

 கயிறுகளை வைத்து முடிச்சு போடும் பழக்கம் மனிதர்களுக்கு எப்படி வந்திருக்கும்?  சிறு வயதில் பூ தொடுப்பதை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் பூக்களை இரண்டிரண்டாக எடுத்து தரும் பெரிய பொறுப்பை  கொடுத்து பூ தொடுப்பதை பற்றிய அறிவை தரமறுத்து விட்டனர். பக்கத்து வீட்டு அக்கா பூ தொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். கைவிரல்களை லாகவமாக வளைத்து , திருப்பி , இழுத்து என விரல்களில் நூலை வைத்து ஒரு நடன அசைவை கொண்டு வந்து தியான நிலையில்  பூ தொடுப்பதை பார்க்கும் போது ஆசையாக இருந்தது. நானும் ஒரு நாள் இதைப்போல் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அக்காவின் அருகில் சிறுமி ஒருத்தி பூக்களை இரண்டிரண்டாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  அம்மா எப்போதுமே கூறும் வார்த்தைகளில் ஒன்று " கண்ணு பாத்தா , கையி செய்யணும் " என்று. அந்த வார்த்தைகளை  நினைவில் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி எதையுமே செய்ய முயற்சித்ததில்லை. இன்று முயன்று பார்த்துவிட ஆசை வந்தது.  பூக்களை வீணாக்க மனது வரவில்லை. காகிதங்களை வைத்து கட்டிப் பழக முடிவு செய்தேன். அந்த அக்காவின் அருகிலேயே அமர்ந்து கவனித்தபின் த

வாசனை....(அனுபவம்)

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல மணம் வந்த பிறகு வெட்டுங்கள் என்று கொடுத்தார் கடைக்காரர். நான் மணிக்கொரு முறை பலாவின் வாசனை வருகிறதா என்று அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன். நான்கு நாட்கள் ஆகியும் மணம் வரவில்லை. இன்று இரவில் தண்ணீர் தாகம் எடுத்ததால், எழுந்து வாட்டர் பாட்டிலை தேடினேன். மிக மிக ரகசியமாக பலாவின் வாசனை வந்தது.  மின்சாரமில்லாத ஒரு இரவில், ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே வீடு முழுவதற்கும் வெளிச்சத்தையும், மெல்லிய மண்ணெண்ணெய் வாசத்தையும் ஒரு சேர பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமைத்துக் கொண்டிருக்க, பழைய பாட நோட்டுகளின் அட்டையை கூடாரம் போல் வைத்து சிறு சிறு கிராமங்களை உருவாக்கி நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.  அந்த விளக்கின் அருகில் அமர்ந்து, போர்வையை போர்த்திக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, அக்கா படித்துக் கொண்டிருந்தாள். நாஞ்சில் நாட்டு " வாடைக் காற்று பலாவை வாட்டி எடுத்தது " என்று. பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தின் தென்னந்தோப்பில் இருந்த எங்களின் வீட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககவி நுகர்ந்த அந்த பலாவின் வாசனை , அக்கா படித்த  புத்தகத்தின் வழியாக

மகாத்மா என்ற மனிதர்

    மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனை வாசித்து முடித்தேன். தமிழ் இணைய நூலகம் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகிறது. (  https://www. tamildigitallibrary.in/  )   . அதை எனக்கு வழி காட்டிய கடலூர் சீனு சார் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிலிருந்து தான் ,  சத்திய சோதனை, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, போன்ற தேசிய உடமையாக்கப் பட்டுள்ள பதிப்பில் இல்லாத நிறைய நூல்களை வாசிக்க இயன்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்தியாவும் விஷ்ணுபுரம் கெளஸ்தூபம் பகுதியில் வரும் பொலிவை இழந்த நகரம் போலத் தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் அழிந்து விடாமல் காப்பாற்றி மறு கட்டமைப்பு செய்தது காந்தி, அம்பேத்கர், நேரு, படேல், மற்றும் பல தலைவர்கள்  தான்.  புத்தகத்தில் ஐந்து பாகங்கள்  இருந்தது, அவரின் இளமைக் காலம் தொடங்கி , பாரிஸ்டர் படிப்பு, தென்னாப்பிரிக்கா  (நேட்டால்) காங்கிரஸ், தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம், சம்பரான் சத்தியாகிரகம்,ஒத்துழையாமை இயக்கம், நாகபுரி காங்கிரஸ் ஆரம்பம், கைராட்டினத்தின் வளர்ச்சி வரையில் இருந்தது.  காந்தியின் மீது அவதூறுகள் எவ்வளோ இன்னமும் சொல்லி வருகிறார்கள். அவர்களில் யாரேனும் க

குப்பை.....( அனுபவம் )

 வீடே குப்பையாக இருப்பதை உணர்ந்தேன். அடுக்கியிருந்த புத்தகங்களை தூசியை துடைத்து திரும்பவும் அடுக்கினேன்.நுண்ணிய தூசிகளை வெள்ளைத் துணியில் மட்டுமே உணர முடிந்தது. வெறும் பார்வை தரும் ஏமாற்றத்தை உணர்ந்தேன்.புத்தகங்கள் வெளிவந்த காலத்திற்கும் அதை நான் படித்த காலத்திற்கும் இருக்கும் கால இடைவெளிகளை இந்த மெல்லிய தூசிகளைப் போலவே துடைத்தெறிய முடிந்தால் ? பூஜை அறையின் கதவு கூட மெல்லிய எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தது.குத்துவிளக்கின் திரிகள் எண்ணெயை முடிந்த வரைக்கும் உறிஞ்சி ஒளி விட்டுக் கொண்டிருந்தன. எண்ணெய் இருந்த குத்துவிளக்கின் பகுதி பாசி படிந்த நிலையில் இருந்தது.சிக்கு பிடித்த எண்ணெய் வாசம் நாசியில் ஏறியது. எலுமிச்சை நீரை வெள்ளைத் துணியில் நனைத்து கதவையும், சாமி படங்களையும், குத்துவிளக்கையும் துடைத்தேன். கடவுளர்கள் அபிஷேகம் முடிந்த பளபளப்பில் அருள்பாலித்தனர்.  அவருடைய அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.எத்தனை பில் காகிதங்கள்.எழுத்துக்கள் எல்லாம் மறைந்து விட்டது. ஆனாலும் அதை செல்ஃபிலேயே வைத்திருக்கிறார். மொத்தமாக எடுத்து போடும் போது ஏடிஎம் மெசினை சுற்றியிருப்பதை போல இருந்தது. டைரிகளில் இரண்டு ப