Skip to main content

Posts

Showing posts from September, 2024

கத்துங் குயிலோசை.......

  பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது க்வாக்கி க்வாக்கி என்ற கடுமையான புதிய குரல் ஒன்றை கேட்டு பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தேன். நெல்லிக்காய் மரத்தின் இரண்டாவது கிளையில் அமர்ந்திருந்தது ஒரு பறவை . ஃபோல்கா புள்ளிகள் அதன் தேகம் முழுவதும் கருப்பு வெள்ளையாக இருந்தன. திரும்பவும் அதே போன்ற ஒரு கத்தல். காகத்தின் குரலில் கூட ஒரு அழைப்பு இருக்கும். இந்த பறவையின் குரல் எதையோ ஆணையிடுவது போல , கொஞ்சம் கடுமையாக இருந்தது.  அடுத்த நொடியே தொட்டு கண் மை இட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணத்தில் முழுமையான கருமையுடன் சிவப்பு மணி கண்களை உருட்டியபடி பலா மர கிளையில் வந்தமர்ந்தது இன்னொரு பறவை. ஃபோல்கா புள்ளி பறவையின் கத்தல் அமைதியாகியது. பலா மரத்தில் இருந்த பறவை தன்னுடைய சிவந்த வாயை திறந்தது. முதலில் க்வாக்கி என்ற சத்தத்தை கொடுத்து பிறகு க்கூ , க்க்கூ என்று கூவ ஆரம்பித்தது.  குரலை வைத்து தான் அது குயில் என்பதையே தெரிந்து கொண்டேன்.  நாலைந்து முறை கூவி விட்டு பலாமர கிளையிலிருந்து , நெல்லிக்காய் மர கிளைக்கு பறந்தமர்ந்தது. ஃபோல்கா புள்ளி பறவை மேலும் உயர்ந்த கிளையில் பறந்தமர்ந்தது. திரும்பவும் குயில் கூவ ஆரம்பித்தத

என்ன தவம் செய்தனை யசோதா !

 என்ன தவம் செய்தனை யசோதா ! பாடலை எவ்வளவோ முறை கேட்டும் இந்த வரிகளை இன்று தான் ஆழமாக உணர்ந்தேன். ப்ரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்ச வைத்தாய் தாயே !  ப்ரம்மனையும், இந்திரனையும் நினைத்து சிரிப்பாக வந்தது.  அவர்களுக்கு இருப்பது வெறும் பொறாமை இல்லை . விஷ்ணுவை யார் கெஞ்ச வைக்க முடியும் ? நம்மிடம் ஒரு போதும் இவன் இப்படி சிக்க மாட்டேனே ! ஒரு முறையாவது கண்ணனை கெஞ்ச வைத்து வேடிக்கை பார்க்க நினைக்கும் இந்திரனும் , பிரம்மனும் யசோதாவை பார்த்து பெருமையும் , பொறாமையும் , ஏக்கமும் , குறுகுறுப்பும் கொள்வது எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மனம் நிறைந்து விம்முகிறது..... இதை எழுதும் போது பாபநாசம் சிவன் அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? தன்னையே இந்திரனாகவும், பிரம்மனாகவும் கற்பனை செய்து அவர்களின் மனநிலையில் இருந்து எழுதக்கூடிய வரிகள் விண்ணகத்தின் ஊஞ்சலில் இருந்து தான் எழுதியிருக்க முடியும் !! என்ன தவம் செய்தனை யசோதா !!! Manobharathi Vigneshwar 30 June 2024

செராமிக் வகுப்பு

 இந்தோ - கொரியன் கல்ச்சுரல் சென்டரில் செராமிக் செய்வது எப்படி என்ற வகுப்பில் கலந்து கொண்டேன். போட் கிளப்பில் அமைந்துள்ள இடம் ஏதோ ஒரு மலை பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு செல்வது போன்ற உணர்வை கொடுத்தது. நிலமெல்லாம் நீரால் கனன்று குளிர்ந்திருந்தது. கட்டிடத்தில் உள்ளே நுழைந்ததும் மெல்லிய எலுமிச்சை நறுமணத்துடன் ஏசியின் குளிர்காற்று நாசியில் ஏறியது. மஞ்சள் நிற சுடிதார் அணிந்த கொரியன் பெண் ஒருவர் வரவேற்று அமர செய்தார். எங்கேயும் நிழலே விழாதபடி வெளிச்சம் நிறைந்திருந்தது. வரவேற்பறையில் கொரியன் அழகுக்கலை , கட்டிடகலை மற்றும் இலக்கியம் சார்ந்த சஞ்சிகைகள் ஆங்கிலத்தில் இருந்தன.  இலக்கியம் சார்ந்த சஞ்சிகை ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்த போது , வகுப்பு ஆரம்பம் என்று அழைத்தார்கள். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தேன்.  மொத்தமாகவே ஐந்து பேர் மட்டுமே. அதில் ஒரே ஒரு ஆண். களிமண் கொண்டு உருவங்களை செய்வது எப்படி என்ற அறிமுக வகுப்பு. அவர்கள் பயன்படுத்துவது நம் நாட்டில் கிடைக்கும் களிமண் இல்லை. அதனோடு சேர்த்து சீன மற்றும் கொரியன் களிமண்ணை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து செய்யப்பட்ட மண்.