Skip to main content

என்ன தவம் செய்தனை யசோதா !

 என்ன தவம் செய்தனை யசோதா !

பாடலை எவ்வளவோ முறை கேட்டும் இந்த வரிகளை இன்று தான் ஆழமாக உணர்ந்தேன்.

ப்ரமனும் இந்த்ரனும் மனதில்
பொறாமை கொள்ள
கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்ச வைத்தாய் தாயே ! 



ப்ரம்மனையும், இந்திரனையும் நினைத்து சிரிப்பாக வந்தது. 
அவர்களுக்கு இருப்பது வெறும் பொறாமை இல்லை . விஷ்ணுவை யார் கெஞ்ச வைக்க முடியும் ? நம்மிடம் ஒரு போதும் இவன் இப்படி சிக்க மாட்டேனே ! ஒரு முறையாவது கண்ணனை கெஞ்ச வைத்து வேடிக்கை பார்க்க நினைக்கும் இந்திரனும் , பிரம்மனும் யசோதாவை பார்த்து பெருமையும் , பொறாமையும் , ஏக்கமும் , குறுகுறுப்பும் கொள்வது எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மனம் நிறைந்து விம்முகிறது..... இதை எழுதும் போது பாபநாசம் சிவன் அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? தன்னையே இந்திரனாகவும், பிரம்மனாகவும் கற்பனை செய்து அவர்களின் மனநிலையில் இருந்து எழுதக்கூடிய வரிகள் விண்ணகத்தின் ஊஞ்சலில் இருந்து தான் எழுதியிருக்க முடியும் !!

என்ன தவம் செய்தனை யசோதா !!!

Manobharathi Vigneshwar
30 June 2024