சோபாவில் வந்து அமர்ந்தால் ஜன்னலின் வழியே தெரிவது எதிர்வீட்டின் உப்பரிகை தான். முகலாயபாணியில் கட்டப்பட்ட வீட்டின் முகப்பும் , உப்பரிகையும் நான் பார்த்ததும் மலர்ச்சி கொள்வது போல தோன்றும். மனிதர்கள் வீட்டை எத்தனை வடிவங்களில் கட்டுகிறார்கள். அதை அவர்கள் தினந்தோறும் ரசித்து மகிழ்ச்சியாக பார்க்கிறார்களா ? எத்தனை பேர் தங்களுடைய வீட்டை வெளியில் நின்று வருடத்தில் ஒரு நாளேனும் ரசிக்கிறார்கள். வீட்டின் வடிவங்களை பார்ப்பவர்கள் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர்களே எனத் தோன்றுகிறது. அவர்களும் ஜன்னலைத் திறந்தால் மட்டுமே. நாங்கள் கருங்குழியின் வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இரண்டரை வருடங்களாக ஜன்னலையே திறந்தததில்லை. கதவும் சாத்தியே இருக்கும். என் மனதையே அப்படித்தான் வைத்திருந்தேனோ என இப்போது தோன்றுகிறது. ஏதோ ஒரு நாள் காலையில் திடீரென வீட்டின் அனைத்து ஜன்னல்களையுமே திறந்து வைத்தேன். வீடே குளுமையாகவும் , வெளிச்சமாகவும் மாறியது. இதற்கும் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்பட்டிருந்தாலும் நான் திறந்து வைக்க விரும்பாமல் இரு...