குக்குடம் எதை தான் தேடுகிறது ! வானம் இருண்டிருந்தது. மழை பெய்ய போவதற்கான வாசம் வீசியது. வேப்பிலை ஒன்றை கொடை பிடித்து சென்றது எறும்பு. சட் சட் என மழைத்துளிகள் விழுந்தன. வேகமாக ஓடி பெரிய புல் ஒன்றின் அடியில் நின்றது எறும்பு. தவளைகளின் கொரக்.. கொரக் என்ற சத்தம் கேட்டது. மழை பெய்தால் தவளைகளுக்கு தான் கொண்டாட்டம்! என்று சலித்து கொண்டது எறும்பு. குவிக் குவிக் என்ற பாடல் மகிழ்ச்சியாக ஒலித்தது! எனக்கும் கூட தான்! என்று வந்து அமர்ந்தது மழைக்காடை. ஹ்ம்ம் ! குவிக் குவிக் என்ற சத்தம் வந்ததும் தெரிந்து கொண்டேன்! என்றது எறும்பு. மழை எப்போது நிற்பது? நான் எப்போது உணவை சேமிப்பது? என புலம்பியது எறும்பு. நீ தான் ஏற்கனவே உணவை சேமித்து வைத்திருப்பாயே! என்றது மழைக்காடை. அந்தக் கதை தெரியாதா ? உனக்கு ? என சலித்துக் கொண்டது எறும்பு. விருப்பமிருந்தால் கூறு! என்று றெக்கையை உலுக்கி கொண்டது மழைக்காடை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உணவை சேர்த்து வைத்திருந்தேன்! குவிக்! என்றது மழைக்காடை! நேற்று ஒரு கோழி வந்...