எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது இப்போது . தார் ரோடுகள் அனைத்து இடங்களையும் இணைக்கின்றன. பயணம் செய்யும் போதெல்லாம் அரசு நிர்வாகங்களை நினைத்து பெருமையாக உணர்கிறேன். வந்தவாசி அருகே தெள்ளாறை தாண்டி தேசூரை தாண்டி , தூணாண்டர் கோவில். இடையில் கீழ்நமண்டி அகழாய்வு செல்லும் வழி என போர்டு இருந்தது. முதலில் சீயமங்கலம் சென்றுவிட்டு வரும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றோம். கோவில் அருகே வரும் போதே அங்கே இருந்த அம்மா ஒருவர் வண்டியை அங்கேயே நிறுத்தசொல்லி பதட்டமாக வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கோவிலின் முன் இறங்கி நின்றோம். இங்கதான் வந்தீங்களா? அந்தப்பக்க ரோட்டுல திரும்பிரூவீங்கலோன்னு நெனச்சு வண்டிய நிறுத்த சொன்னேன். அந்த ரோட்டுல நல்ல பாம்பு ஒண்ணு பத்தி விரிச்சு ரொம்ப மெதுவா நகந்து போயிட்டு இருந்துச்சு. ரெண்டு கை வண்ணத்துல இருந்துச்சு என்று பயமும் பரவசமும் பொங்க கூறினார். கோவில் கேட் பூட்டியிருந்தது. எப்போ திறப்பாங்க என்று கேட்டோம். வாட்சமேன் கிட்டதான் சாவி இருக்கும் , இந்த போர்டுல நெம்பர் இல்லீங்களா? என்றார் அ...