இன்னும் இரண்டு நாட்களில் நல்ல மணம் வந்த பிறகு வெட்டுங்கள் என்று கொடுத்தார் கடைக்காரர். நான் மணிக்கொரு முறை பலாவின் வாசனை வருகிறதா என்று அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன். நான்கு நாட்கள் ஆகியும் மணம் வரவில்லை. இன்று இரவில் தண்ணீர் தாகம் எடுத்ததால், எழுந்து வாட்டர் பாட்டிலை தேடினேன். மிக மிக ரகசியமாக பலாவின் வாசனை வந்தது. மின்சாரமில்லாத ஒரு இரவில், ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே வீடு முழுவதற்கும் வெளிச்சத்தையும், மெல்லிய மண்ணெண்ணெய் வாசத்தையும் ஒரு சேர பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமைத்துக் கொண்டிருக்க, பழைய பாட நோட்டுகளின் அட்டையை கூடாரம் போல் வைத்து சிறு சிறு கிராமங்களை உருவாக்கி நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த விளக்கின் அருகில் அமர்ந்து, போர்வையை போர்த்திக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, அக்கா படித்துக் கொண்டிருந்தாள். நாஞ்சில் நாட்டு " வாடைக் காற்று பலாவை வாட்டி எடுத்தது " என்று. பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தின் தென்னந்தோப்பில் இருந்த எங்களின் வீட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககவி நுகர்ந்த அந்த பலாவின் வாசனை , அக்கா படித்த புத்தகத்தின் வழியாக