பெசண்ட் நகரின் உடைந்த பாலத்திற்கு அருகே ஒரு கூடாரம். மூங்கில்களால் ஆன சுவர்களும் தார்ப்பாயினால் மேற்கூரையும் அமைத்திருந்தார்கள். உள்ளே நிறைய மூங்கில் கூடைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. சிறிய கூட்டம் இருந்தது. பனிரெண்டு வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சில குழந்தைகளும் இருந்தனர். மாலை ஆறு மணி ஆகும் போது SSTCN அமைப்பை சேர்ந்த மாணவி ஒருவர் உரையாற்றினார். ஆலிவ் ரிட்லி ஆமைகள் கடலில் வெகுதூரம் பயணம் செய்யக்கூடியவை. இனப்பெருக்கத்தின் போது மட்டுமே பெண் ஆமைகள் கடற்கரையை நோக்கி வந்து கடல் நீர் வராத தூரத்திற்கு மணலில் கூடமைத்து முட்டைகளை இடுகின்றன. கிட்டத்தட்ட மூன்று முறை வெவ்வேறு கால இடைவெளிகளில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை இட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் சென்றுவிடும். இந்த முட்டைகள் அதற்கான பருவம் வந்தவுடன் குஞ்சுகளாக வெளிவரும். அவை பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் வெளிவருகின்றன. கடலில் நிலவின் வெளிச்சம் படும் போது தெரியும் ஒளியினால் இவை கடலை நோக்கி செல்கின்றன. பெண் ஆமைகள் ஆக இருந்தால் திரும்பவும் ...