Skip to main content

ஆப்பிளின் நிலம்....

 ஆப்பிள் தனக்குள்ளே தான் விளைந்த நிலத்தை வைத்திருந்தது.

நீள நீளமாக வெட்டி சாப்பிடும் போது விளை நிலம் கண்ணில் தெரிவதில்லை. இன்று முழு ஆப்பிளையும் கடித்து சாப்பிடும் போது தான் கவனித்தேன். பனித்துகள்களால் ஆன பிரதேசத்தை காண்பது போல் இருந்தது. பனியின் நுனியில் இருக்கும் மினுமினுப்பை கூட காண முடிந்தது. 

மாவு போல் இருக்கும் ஆப்பிள் விக்னேஷ்வருக்கு பிடிப்பதில்லை. நான் எப்போதும் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மாவு போன்ற ஆப்பிளில் தான் கடித்த பிறகு அதனுள்  பனிப்பிரதேசத்தை கண்டேன். தன்னுடைய கனவை எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் கடந்து என்னிடம் சேர்த்திருக்கிறது. 



கடித்த இடத்தில் சிறு  மரம் இருப்பது போலவும், நிறைய ஆப்பிள்கள் காய்த்திருப்பது போலவும் தோன்றியது தோற்றமயக்கம் தான் என்று தெளிவதற்கு சில நிமிடங்கள் ஆகியது.

ஒவ்வொரு நிலமும் தன்னில் கனிந்து உருமாறியவை தான் கனிகள்.


Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
01-11-2024